அனைத்துலகையம் படைத்து காத்து பரிபாலிக்கும் பரம்பொருளாகிய பரமேஸ்வரன் ஆதிஅந்தமில்லாதவர். உருவம் அருவம் அன்றால் எல்லைகளை எல்லாம் கடந்தவர் என்று பொருள் . ஆகவே தான் அவரை உருவமும் அருவமும் இல்லாத லிங்கத்திருமேனியை பூஜிக்கிறோம்.
அவ்விதமான லிங்க உருவில் தானே வெளிப்பட்ட இடங்களை ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்கள் எனவும் , ஜ்யோதிர் லிங்கத் தளங்கள் எனவும் போற்றுகிறோம் , அப்படிப்பட்டதோர் அற்புத தன்மையோடு நோய் தீர்க்கும் மாமருந்தாக பன்னெடுங்காலம் பக்தர்களுக்கு அருள் செய்யும் திருவுள்ளதோடு எல்லாம்வல்ல சிவபரம்பொருள் சான்னித்யம் கொண்டிருக்கும் இடமே வேண்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ தையல்நாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ஆலயம்.
திருவருளும் குருவருளும் துணை நிற்க மெய்யன்பர்கள் சிலரின் சீரிய முயற்சியால் புதியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயத்தில் அருள்மிகு ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமிக்கும் , ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் , ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ முருகர் ,ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி , ஸ்ரீ மஹாவிஷ்ணு , ஸ்ரீ பிரம்மா , ஸ்ரீ துர்கை , ஸ்ரீ சண்டிகேஸ்வரர் , ஸ்ரீ ஆஞ்சநேயர் , ஸ்ரீ சூரியன் , ஸ்ரீ சந்திரன் , ஸ்ரீ நந்தி பகவான் , ஸ்ரீ நாக தேவதை , ஸ்ரீ நால்வர் - நாயன்மார்கள் , நவகிரஹங்கள் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது
மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீ க்ரோதி வருடம் ஆணி மாதம் 24 ஆம் தேதி 08.07.2024 திங்கட்கிழமை திருதியை திதி பூசம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 6:15 மணிக்குமேல் 7:15 மணிக்குள் கடக லக்கினத்தில் நடைபெற ஸ்ரீ பரமேஸ்வர க்ருபை அனுகிரஹித்துள்ளது . இதை புண்ணிய நிகழ்விலே அனைவரும் கலந்துகொண்டு இறைவனின் அருளுக்கு பாத்திரமாக வேண்டுமென அன்போடு வேண்டுகிறோம்.